
பொல்லாத காதல்:
"சீக்கிரம் கிளம்புங்க .. லேட் ஆகுது.. நான்
பேக் எடுத்து தறேன் ..அதுக்குள்ள ஷூஸ் போடுங்க" என்றாள்.
அழகாய் மனைவி.. இதமாய் மழை.. கட்டி அணைக்கும் தூரம்..
ஆபீஸ் செல்ல துளியும் மனம் இல்லை எனக்கு.
"மழை வர்ற மாதிரி இருக்கு"ஏன்றேன்.
"அதெல்லாம் வராது" என்றாள்.
சற்று பொறுத்து "தலை ஒரு பக்கமாய் வலிக்கிது.. என்னனு தெரியல!" என்றேன்.
"பேக்ல தாப்லெட் வெச்சிருக்கேன்... சாப்பிடுங்க சரியாஇடும்" என்றாள்.
"இல்ல ... ஜோரம் வர்ற மாதிரி இருக்கு..இன்னிக்கு பேணல் மீட்டிங் வேற இருக்கு.. அதான் பாக்குறேன்."
"லீவ் பேலன்ஸ் உனக்கு சுத்தமா இல்லடா .. ஈவிநிங் வா டாக்டர் கிட்ட போகலாம் .. இப்போ கிளம்பு.."
ஜன்னல் ஓரமாய் நின்று என் பேக்கை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்...மெலிதாய் காற்று வீசியது..விரலால் முடியை சரி செய்து என்னை ஒரு முறை பார்த்தாள்..
கண் இமைக்காமல் அவளை ரசித்தேன்.. சற்று ஏடாகூடமாய்..!
"என்ன?" என்றாள்...
"அழகாய் இருக்க" என்றேன்.
சிரித்து கொண்டே "கொஞ்சமா இல்ல ரொம்பவா?" என்றாள்
அருகில் சென்று அனைத்து கொண்டு
"கண்ண மூடு சோல்றேன்" என்றேன்.
சட்டென்று என்னை தள்ளி விட்டு.. என் தோளில் பேக்கை மாட்டி விட்டாள் .
கதவருகே என்னை தள்ளி கொண்டு சென்றாள்.
"கிளம்பு" என்றாள்.
பாவமாய் ஒரு முறை பார்த்தேன்...பயனில்லை.
கதவை சாத்தி விட்டு உள்ளே சென்றாள்.
ஒன்று நிச்சயம் .. அவள் இதழ்கள் முணுமுணுத்தது மௌனமாய் -- "இக்கணமே மழை பெய்யக்கூடாதா" என்று.
மேலே ஒரு முறை பார்த்தேன் .. மேகமாய் இருந்தது.
வாசல் வரை சென்றிருப்பேன் ..
ட்மார் என்று சத்தம்... இடி.. தர தரவென மழை கொட்டியது..
மறுகணம் வீட்டை நோக்கி ஓடினேன்... கதவருகே சென்ற மறு நொடி.. அவள் கதவை திறந்தாள் ..
கள்ளத்த்னமாய் சிரித்தாள் ..
கதவருகே சாய்ந்து கொண்டு , புருவம் உயர்த்தி கேட்டாள்.. " இந்த மழைல போகணுமாடா!"
"லீவ் பேலன்ஸ் எனக்கு சுத்தமா இல்ல.. " என்றேன்
"உனக்கு உடம்பு சரி இல்லனு சொன்ன " என்றாள்
நக்களாய் சிரித்து கொண்டே "பேக்ல தாப்லெட் வெச்சிருக்கேன்!" என்றேன்.
அருகில் வந்து என் விரல் பிடித்து
"நான் அழகா இருக்கெனா" என்று கேட்டாள் ...
தலை ஆட்டினேன்..
"கொஞ்சமா இல்ல ரொம்பவா?" என்றாள்..
அருகே சென்று கட்டி அனைத்து "கண்ண மூடு சோல்றேன்" என்றேன்..
கண்ணை மூடினாள்.. கட்டி அனைத்து இதழ் பதித்த கணம் மட்டும் ஞாபகம்!!..
மழை ஓய்ந்தும் காதல் ஓயவில்லை...
போதும் என்ற சொல் அன்று அர்த்தமற்று போனது!!
முறயாய் மூன்று முத்தம் கேட்டேன் ..
தவறாக மூன்றும் ..சரியாக மூண்றும் கொடுத்தாய்..
உன் காதல் ... பொல்லாதது !!!
___________________________________________________________________________________
Hi JEGADEESH,
ReplyDeleteTHE POEM WAS REALLY NICE.
RAJIV